Wednesday, September 5, 2007

இனி பொறுப்பதில்லை எரிதழல் எடுத்து வா!

சுற்றும் விழிகள் கொண்டு
திக்கெட்டும் பார்க்கிறேன்
தேடிச்சென்ற இடமெல்லாம்
தேவைகளின் ஆதிக்கம்

கட்டிய கரைவேட்டிகள்
காரிலே பறந்து செல்ல
ஒட்டிய வயிரோடு
உழைப்பவனோ தெருவோரத்திலே

நெஞ்சத்தில் நீதியோடு
இருக்க வேண்டியவர்கள்
மஞ்சத்தில் மங்கையை
தேடும் அவலம்

சிந்திய வேர்வைகளை
சேர்த்து வரியாய் கட்ட
முந்திச்சென்று
விழுங்குகிறதே
ஊழல் முதலைகள்

குருதியில் குளிக்கிறதே
மனித பூக்கள்
உதிரம் உறைகிறது-என்
மனதுக்குள்

திரும்பிய திசைகளெல்லாம்
எரிந்த சருகுகளாய்
சிரித்த முகங்கள்
சிதறிக் கிடக்கிறதே…
என்ன சொல்வேன்
வாங்கிய சுதந்திரம் இருட்டிளேயே இருக்கிறது

இனியும் பொறுப்பதில்லை
எரிதழல் எடுத்து வா
ஏற்றிடுவோம் புதிய
சுதந்திர தீபம்……!

1 comment:

Sermuga Pandian said...

மகாகவியின் வரிகளை சரியாக பொருத்தி இருக்கிறீர்கள். அருமை. மிக மிக அருமையான கவிதை