
அடிமை விலங்குகளை அகற்றுவதில்
செந்நீர் உதிர்ப்பதும் தன் உயிர் கொடுப்பதும்
தமிழனுக்கு ஒன்றும் புதிதில்லை அன்று..
இன்றோ தன்னுயிர் காக செந் நீர் சிந்தி
பூமிபந்தில் ஆங்காங்கே வாழ்கிறது
என் தமிழர் இனம்...
ஈழத்தமிழர் இனம்
இறையாண்மைக்கு எதிராக எதுவும்
பேசமாட்டோம்... சொல்கிறது
என் இந்தியா...!
இருப்பவர்களெல்லாம் இடம் பெயர்ந்த பின்பு
இறையாண்மை என்ன வேண்டி இருக்கிறது...?
கண்ணசைவு கட்டளையில்
கைகட்டி நிற்க வேண்டிய ஓர் அரசை
ஆயுதம் ஏந்த அனுமதித்து விட்டு
அதை ஆதரித்தும் வருகிறது இந்திய அரசு
இத்தாலியின் தலைமை ஏற்ற இந்தியாவுக்கு
தமிழன் அந்நியனாய் தெரிகிறான் போலும்
என்ன இறையாண்மை கொள்கையோ
"அழித்தலும்"...."காத்தலும்"
"சிவனும்" "நாராயணனும்" அறிந்த இரகசியம்
அவர்கள் புரிந்த இரகசியமும் கூட....!