Monday, December 15, 2008

தோழியா....காதலியா....!?


மழை நீரினால் அல்ல
மழைமேகக் காற்றின் ஈரப்பதம் கூட
கண்டிராத பூமியில்
பெருவெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுவதைப்போல்......
எனக்குள் ஒரு மகிழ்ச்சி அன்று:

நினைவுகளில் என் அருகில் நின்று
நிஜத்தின் இடைவெளியில் நெடுந்தூரம்
சென்றுவிட்ட என் பெண் தோழி
அவளைக் கண்ட நாள் அன்று

வெள்ளிப்பனிமலையை நூழிலையாய் சேகரித்து
உயர் தங்கம் குழைத்து ஜரிகையாய் தொடுத்து
மின்னலைப்போல் நெய்த புடவை அது
அவள் மேனியில் செல்லமாய்
தவழ்ந்திடும் காட்சி
வெண்ணுடை தரித்த தேவதை- என்
விழிமுன்னே வந்தது போல் மகிழ்ச்சி

இன்று பூத்த மலர்போல்
புன்னகை பூத்திருக்கும் இதழ்கள்
அந்த இதழ்கள் பேசும் இசைலயத்திற்கேற்ப
நடனம் புரியும் அவள்
அணிந்திருக்கும் காதணிகள்

அந்தக் கம்பனையும் மீண்டும்
பிறந்து வந்து கவிபாடத்தூண்டும்
அவள் கொண்ட கருங்குழல்
புல்லாங்குழலின்றி இசை
கொடுக்கும் அவள் குரல்
இத்தனை அழகையும் மொத்தமாய் சேகரித்து
என் எதிரே நின்று புன்னகைத்து கொண்டிருக்கிறாள்
புகைப்படத்தின் வழியே!

எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்
இவள் என் தோழியா.... காதலியா...!?

2 comments:

சுபா காரைக்குடி said...

Romba nalla kavithai....

Indha varigal romba nalla irrukku...

"நினைவுகளில் என் அருகில் நின்று
நிஜத்தின் இடைவெளியில் நெடுந்தூரம்"

Thodarattum ungal payanam..

Ilayarajakumaran said...

அருமை.காதலினால் ஏற்பட்ட உணர்வு அருமை.மற்ற கவிதைகள் இதற்கு இரண்டாம் பட்சமே