எங்கு தொலைத்தேன்
என்று தெரியவில்லை
இங்காவது கிடைக்குமா என்று
தேடி வந்துள்ளேன் வகுப்பறைக்கு
என் இதயத்தை ....?
Saturday, December 29, 2007
Thursday, December 13, 2007
இனி நான் என்ன இழப்பது..?

இன்று உலகத்தின் விமர்சனத்தில்
எங்கள் வாழ்வை கருப்பொருளாய்கொண்டு?
எல்லோரும் போல்தான் நானும்
எல்லாம் கொண்டிருந்தேன்
மனைவியும் மக்களும் நான் வளர்த்த
மாக்களும் மாடவீதியில் மணிமாளிகைபோல்
ஒரு வீடும் என்று எல்லாம்தான்
நான் கொண்டிருந்தேன் இந்த ஈழ பூமியில்...
கண் நிறைய மகிழ்ச்சி கண்ணீரும்
மனம் நிறைய சந்தோசம் கொண்டு
வாழும் வாழ்க்கை ஒன்று உண்டென்று
கடல் தாண்டி இருக்கும் தாய் தமிழகத்தில் யாரோ சொல்ல
ஒருமுறை நான் கேட்டதுண்டு...
கண்ணில் மட்டுமின்றி காயம் பட்ட இடமெல்லாம் கண்ணீர்த்துளிபோல்வழிகிறது இரத்தத்துளிகள் இன்று
எங்கள் ஈழ பூமியில்...
அன்பான மனைவி அவள் அகதியாக
சென்ற போது ஆழ்கடலில் மூழ்கிவிட்டாள்
சினம்கொண்ட சிங்கள ராணுவத்தின் தாக்குதலில்.......
அன்னையே போனபின்பு இவர்களை என்ன
செய்யவென்று அழகிய என் பிள்ளைகளையும்
அவன் துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன
எல்லாம் இழந்துவிட்டு இருந்த வீடும்
இடிக்கப்பட்டு இன்று வீதியே வீடாக
மிஞ்சிய இந்த பொருள்களே சொந்தமாக
துணைகொண்டு ....
.சுதந்திர விடுதலையா இல்லை
என் சுவாச விடுதலையா
எது முதலில் வரும் என்று
இன்று கிடைத்த இந்த இடத்தில்
நான் கிடக்கிறேன் என் பிள்ளை
வயதுடையோர் என் வயது வரும்
போதாவது சுதந்திரக்காற்று வீசுமென்று!
Wednesday, December 12, 2007
என் தாய் தமிழ் மக்கள்

கடல் தாண்டி
ஆண்டு வந்த தமிழ் சமுதாயம்
இன்று கலை இழந்து கவலையோடும்
கண்ணீரோடும் கடலுக்கு நடுவே
அல்லல்படுகிறது
வாழ்வு வேண்டுமென்று வந்தோரெல்லாம்
வசதியாக வாழ்கின்றனர் என் தமிழ்நாட்டிலே
இங்கு வாழ்ந்துவிட்டு சென்ற தமிழீழ
தமிழினமோ தவிக்கிறது தண்ணீருக்கும்
தங்குமிடத்துக்கும்....
எக்காலமும் நிக்காது இக்காலம் வரை
தொடர்கிறது சிங்கள இனவெறியை
ஒருக்காலும் அனுமதியாத சுயமரியாதை
யுத்தம்...
தனித்தமிழ் தேசம் காணும் வரை
இது நிற்காது செல்லும் நித்தம்
அதுவரை நம் தோழர்கள் குடும்பத்தை
அரவணைப்போம் அவர்களுள் ஒருவராக
Subscribe to:
Posts (Atom)